Press release Applications are invited from the children of Estate workers (Tamil)

Applications are invited from the children of Estate workers (Tamil)

இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் 

 கண்டி 

 *** 

ஊடக வெளியீடு 

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளையின் (CEWET) கீழ் புலமைப்பரிசில் வழங்குவதற்காக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த புலமைப்பரிசில்கள் க.பொ.த. உயர்தரம், இளங்கலைப் படிப்புகள் மற்றும் இலங்கையில் உள்ள வேறு எந்த அரச தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

  1. க.பொ.த. சாதாரண தரம் (குறைந்தபட்சம் 6 சிறப்பு சித்திகளுடன் ) அல்லது உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் 25 வயதுக்கு குறைவானவர்கள் இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிப்தற்குத் தகுதியானவர்களாவர். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் பிறப்புச்சான்றிதழின் நகல், க.பொ.த. சாதாரண தரம் அல்லது க.பொ.த. உயர்தர பெறுபேற்று சான்றிதழின் நகல், பெற்றோரின் சமீபத்திய சம்பளச் சீட்டு மற்றும் பெற்றோரின் தொழில் தொடர்பான தோட்ட மேலதிகாரியின் அத்தாட்சி சான்றிதழ் மற்றும் விண்ணப்பிக்கும் மாணவரது புதுப்பிக்கப்பட்ட வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் இணைக்கப்படல் வேண்டும். விண்ணப்பப் படிவங்களை கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளமான www.ahcikandy.gov.in இல் மற்றும் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளமான www.hcicolombo.gov.in ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
  1. விண்ணப்பப் படிவங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயம், 36-38, காலி வீதி, கொழும்பு-03 அல்லது இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம், இல. 42, ஹில்பென்கந்துர மாவத்தை, அம்பிடிய வீதி, கண்டி ஆகிய இடங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
  1. முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கௌரவ செயலாளர், சிவெட், இந்திய உயர்ஸ்தானிகராலயம், த.பெ. எண் 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கோ அல்லது இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம், இல. 42, ஹில்பென்கந்துர மாவத்தை, அம்பிடிய வீதி, கண்டி என்ற முகவரிக்கோ 2024 ஏப்ரல் 29 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.



 கண்டி 

 28.03.2024

CEWET application form - 2024.